ChennaiBookfair48 : Collection
இந்தாண்டு புத்தக காட்சியில் வாங்கியவை இவ்வளவு தான். மாதந்தோறும் புத்தகம் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் பெரியளவில் கொள்முதல் செய்யத் தோன்றவில்லை.
நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அழைப்பு வந்திருந்தாலும் பங்கேற்க இயலவில்லை. எழுத்தாளர்கள் IsKra , Nishanth Vks ஆகியோரை நேரில் சந்திக்கும் திட்டமும் கைகூடவில்லை.
நேற்று மாலை புத்தகம் வாங்கிக் கொள்வதற்காக Nelson Xavier வழங்கிய தொகையில் தமிழ் அகர முதலி வாங்கினேன்.
-----
சிந்தனை ரீதியில் தமிழ் எழுத்துலகில் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது. தவிர்த்து, அரசியல் உணர்வுள்ள சொற்கள் அர்த்தமற்றுப்போய் கொண்டிருக்கின்றன. அவை சிந்தனை அளவில் எவ்வித எழுச்சியையும் ஏற்படுத்துவதில்லை. அதுகுறித்த ஆழ அகலங்கள் தூர்ந்து வருவதாக படுகிறது.
என் அனுமானம் தவறாக இருக்கலாம், ஆனால் அகத்தைத் தூண்டக்கூடிய அசலான சிந்தனைகள் தமிழில் நலிவுற்று வருகின்றன. கூர்மையுணர்வுகள் மழுங்கி கொண்டிருக்கின்றன. எதிலுமே ஆழம் இருப்பதில்லை. தீர்வுகளைத் தேட முனையும் கேள்விகளும் எழுப்ப படுவதே இல்லை.
-------
சேமிப்பில் புனைவிலக்கியங்களின் எண்ணிக்கை கூடி இருப்பதற்கும் அதுவே காரணம். இந்த புத்தக காட்சிக்கு அவசரகதியில் மூன்றுநாள் தான் செல்ல முடிந்தது, இருப்பினும் பட்டியலில் உள்ள புத்தகங்கள் அனைத்துமே தேர்ந்தெடுத்து வாங்கியவை.
‘இல்லை’களால் சூழப்பட்ட புத்தக காட்சியாக 48-ஆவது சென்னை புத்தக காட்சி அமைத்திருக்கிறது. இறுதி நாளில் புத்தக காட்சிக்கே செல்லவில்லை.
P.S: முதுகில் பெயரில்லாமல் இருக்கும் வெள்ளை நிற புத்தகம் ஜார்ஜ் ஜோசபின் ‘பெருநெஞ்சன்’ சிறுகதைத் தொகுப்பு, எம்.எஸ் நீலத்தில் உள்ள புத்தகம், நரனின் கவிதை நூலான ‘உப்பு நீர் முதலை’.
#Books #ChennaiBookfair48
சிறப்பு
ReplyDelete