Remembering Anna
1
நேற்றைய தினம் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, இணையத்தில் சில பக்கங்களை படித்து கொண்டிருந்தேன். பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் இணையதளத்தில், அவருடைய கையெழுத்து அடங்கிய, எழுதப்பட்ட நோட்டுகளையும் காண நேர்ந்தது. தமிழில் ஐந்தும் ஆங்கிலத்தில் ஒன்று இருந்தன, தமிழில் இருந்ததை எல்லாம் புரட்டிப்பார்த்துவிட்டு ஆங்கிலத்திற்குள் நுழைந்தேன்.
தி.மு.கவின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளை எல்லாம் தொகுத்து அதில் எழுத முயற்சி செய்திருக்கிறார், ஒரு பக்கத்தில் “I shall Continue through the D.M.K to help the commoner negotiate his rights. Parties or persons already engaged in this task should not feel frustrated when new forces emerge. They should try to (harvest / harness) the same for the common purpose instead of engaging themselves in the untenable attempt at annihilating these new forces.” என்கிறார். புது கட்சி தொடங்கியவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான இலக்கணம்.
மேலும் மக்களை எத்தனை முக்கியத்துவம் கொண்டவர்களாக அவர் கருதினார் என்பதை உணர்த்தும் சில வரியைகளையும் வாசிக்க நேர்ந்தது, “The DMK wants something more than what is its due and its credentials are sealed with the approval of the public.” என்றும், அதற்கடுத்த பக்கத்தில் “The DMK wants to cleanse the Political atmosphere by letting in fresh breeze and sunshine. Hence they appeal to the people to unseat the congress from power in 1967”.
இறுதி பக்கமும் அதை தொடர்ந்த பக்கங்களும் ஆச்சரியமூட்டின, “Our Society is an ancient one that gives us our strength and our weakness. There Should be a strong dose of Dynamism injected in the society of today to make it give up its age-long prejudices based on caste and creed. The D.M.K wants to engage itself in this field as well” என்று நிறைவுற்றது இறுதி பக்கம்.
அதை தொடர்ந்து அரசுகள், பேரரசுகள், தேசிய அரசுகள், காலனிய அரசுகள், ஏகாதிபத்தியம் என்று விரிகிறது. சிற்றரசுகளால் ஆளப்பட்டபோது அங்கு முகிழ்ந்த செறிவான இலக்கியங்களை கவனப்படுத்துகிறார். தமிழகம் போன்ற சிறிய அரசுகள் சுதந்திரமாக இருந்த போது தான் வள்ளுவர், அகம் & புறம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு எல்லாம் உருவாகின என்கிறார். காளிதாசரை குறிப்பிட்டு சிறிய ராஜ்யங்களில் தான் அவர் உருவெடுத்தார் என்கிறார்.
பேரரசுகள் குறித்து பேசும் அவர், ரோம சாம்ராஜ்யம், ஓட்டமன் பேரரசு, பிரிட்டிஷ் காலனிய அரசு போன்ற அளவில் பெரிய அரசுகளின் வீழ்ச்சியோடு மக்களை மேம்படுத்துவதில் கிரேக்க City-Statesன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார்.
கிரேக்கத்தின் City States-கள் தான் உலகிற்கு Socratese, Plato, Aristotle, Homer போன்ற ஆளுமைகளையும், ஆகச் சிறந்த தத்துவம், கலை, இலக்கியம், கட்டிடக்கலை, வீரத்தையும் வழங்க வழி வகுத்தது என்கிறார்.
பேரரசுகளின் வீழ்ச்சியை சிற்றரசுகளின் தனித்துவத்தோடு ஒப்பிடுகிறார், மூன்று நான்கு பக்கங்களை கடந்து அவர் எழுதிய இந்த மேற்கோளோடு இந்த சிந்தனையை கோர்த்து நோக்க விருப்பப்பட்டேன், அவரும் இதை மனதில் வைத்து தான் எழுதி இருக்க வேண்டும். “Freedom is the ally of security and liberty is the architect of abundance” என்று சுதந்திரத்தின் மேன்மையை சுட்டிக்காட்டிவிட்டு, “A tired nation said David Lloyd George, is always a tory nation.” என்று நிறைவு செய்கிறார். இந்த இரண்டு வரியை கொண்டும் மட்டும் நிறைய சிந்திக்க முடியும்.
Dynamic Vs Tired, Progressive Vs Conservative, Small States Vs Empires & Nations, Tradition Vs Modern என்ற இருமைகளுக்குள்ளும் அதற்கு வெளியேயும் நாம் யோசிக்கலாம் அண்ணாவும் அப்படி தான் சிந்தித்திருக்கிறார்.
பல சாத்தியங்களை அவர் மனதில் கொண்டே கட்சிக்கட்டி இருக்கிறார், சாத்தியங்களை சென்றடையும் செயல்திட்டமும் மனத்திட்பமும் அவரிடமும் இருந்தது, தன் தம்பிகளுக்கு அவற்றை கடத்தினார். அரசியல் மேதை, பேரறிஞர், Philosopher-King போன்ற அடைமொழிகள் இதுபோன்ற கையெழுத்து பிரதிகள் மூலம் மேலும் அர்த்தப்படுகின்றன.
இன்றைக்கு நம் சிந்தனைகளும் லட்சியங்களும் சுருங்கிவிட்டனவோ! என்று சில நேரம் தோன்றினாலும், நம் தலைவர்களின் இது போன்ற எழுத்துக்களும் பார்வைகளும் அகத்தில் பெரும் விசாலத்தை உண்டுசெய்கின்றன.
பிரதியை படிக்க: https://www.annavinpadaippugal.info/images/oviyam/kaiezhuthu/script_english.pdf
#RememberingAnna #CNA #BOOKS
Comments
Post a Comment