National Front 1988 Ft Joint Action Committee 2025
நியாயமான தொகுதி மறுவரையறைக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சங்கமித்து சென்னையில் நடந்தேறிய Joint Action Committee கூட்டத்தை, 35 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்று சென்னையை ஸ்தம்பிக்க செய்த1988 National Front தொடக்க விழாவுடன் ஒப்பிட்டு ஒரு Nostalgic கட்டுரை இன்றைய(26/03/2025) தி இந்தி ஆங்கில ஏட்டில் வெளியாகி இருந்தது, அதை வாசித்த கையோடு அது சார்ந்த சில செய்திகளை தேடலானேன்.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தை கொண்டு தான் நெஞ்சுக்கு நீதி மூன்றாம் பாகத்தை நிறைவு செய்திருக்கிறார் தலைவர் கலைஞர்.

12 ஆண்டு காலம் ஆட்சி கட்டிலில் இல்லாதபோதும், 30 லட்சம் உடன்பிறப்புகள் சென்னையில் கூடி இப்பொதுக்கூட்டத்தை வெற்றிக்கூட்டமாக ஆக்கியதை நினைத்து பார்க்கமுடிகிறதா. எனக்கு படங்களை பார்க்கும்போது சிலிர்த்தது. தலைமையும், தொண்டர்களும் இதுபோன்ற வரலாற்றுத் தருணங்களை எல்லாம் எப்படி நினைவில் கொண்டிருப்பர் என்று யூகித்து மகிழ்கிறேன்.
‘அண்ணா சாலை கருப்பு சிவப்பு வண்ணக் கடலானது’ என்று எழுதியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு. Frontline-ஐ புரட்டியபோது, ‘A DMK Show’ என்று விளித்திருந்தது. அண்ணா சாலையில் தொடங்கி கூட்டம் நடக்கும் இடமான மெரினா வரை, மாலை 4 மணிக்கு தொடங்கிய அணிவகுப்பு 8:00 மணி ஆகியும்தொடர்ந்து கொண்டே இருந்தது. ஸ்பென்சர் பிளாசாவுக்கு முன் மேடையமைக்கப்பட்டு தலைவர்கள் எல்லாம் அங்கு கூடி இருந்தனர். 8 மணியாகியும் கூட்டம் முடியாத காரணத்தால், தலைவர் எல்லாம் கிளம்பி கூட்டம் நடக்கும் மெரினா கடற்கரையை அடைந்தனர்.

இதை விட வியப்பு என்னவென்றால், 8:30 மணிக்கு தொடங்கிய கூட்டம் அடுத்தநாள் பகல் 2:30 வரை நடைபெற்றது தான். 6 மணி நேரம், பெரும்பாலும் ஆங்கில உரைகளால் நிறைந்திருந்தது அந்த பொதுக்கூட்டம்.
சமூக நீதி நாயகர் வி.பி சிங் மற்றும் முன்னாள் துணை பிரதமர் தேவி லால் ஆகியோரது உரைகள் மட்டும் உடனுக்குடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அங்கு வந்திருந்த பெரும்பாலான தலைவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசி இருக்கிறார்கள். இந்தி இனவாதி என்று தூற்றப்பட்ட தேவி லால் கூட கலைஞரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார். என்.டி. ராமா ராவ் தமிழிலையே தனது உரையை அமைத்துக்கொண்டார்.
எம்.ஜி. ராமச்சந்திரனின் மறைவை தொடர்ந்து அஇஅதிமுகவில் ஏற்பட்ட பல்கோண பிளவுகளை தொடர்ந்து January 31, 1988 -ல் சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் கட்டுப்பாட்டிற்கு வந்திருந்தது தமிழ்நாடு . இதை எதிர்த்து தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் என்றும், இலங்கையில் அமைதி நிலவ புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் என்றும் ராணுவத்தை உடனடியாக திரும்பப்பெற்று போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றமான இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தலை முன்னிட்டு அமைந்த கூட்டணி என்பதால், சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டன. தேவி லால் மிக உறுதியாக "The caravan has started. Those who fail to join will fall on the wayside." என்று உரையாற்றினார்.

நாடே போற்றும் வகையில், காங்கிரஸ் அல்லாத கட்சிகளால் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணியின் அறிமுக கூட்டம் சென்னையில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி குறித்து லோக்தளம் கட்சி தலைவர் பகுகுணா அவர்களிடம், ‘இந்த கூட்டம் சென்னையில் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன?’ என்று கேட்கப்பட்டபோது, திமுகவின் கட்டமைப்பு பலமும், வடக்கு vs தெற்கு என்ற விமர்சனத்தை தவிர்க்க சென்னையை தேர்ந்தெடுத்தோம் என்றும்காரணம் கூறினார்.
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சொல்லிவைத்தார் போல், 12 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கழகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.
ஆட்சிக்கு வந்தவுடன், முதல் நிகழ்வாக வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வி.பி.சிங் கலந்துகொண்ட அந்த விழாவில் கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைப் பற்றியும் அதன் திறப்பு விழாவில் கலைஞருக்கு நேர்ந்த அநீதி பற்றியும் உணர்வெழுச்சியுடன் பேசினார். வரலாறு சுவாரிஸ்யமானது, விழுந்தால் நம்மை சூழ்ந்து கிறக்கி விட கூடியது.
#FairDelimitation காக கூட்டப்பட்ட Joint Action Committee என்பது சட்ட-நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் திமுகவின் முக்கியமான முன்னெடுப்பு.
Comments
Post a Comment