எதிர்பாராத தோல்வி தரும் ஆகப்பெரும் அவஸ்தை எதுவென்றால், ஆற்றாமை. அதன் வழியே உருவெடுத்து, உடலையும் மனதையும் வதைக்கும் சலிப்புணர்வு. “என்ன உழைத்து என்ன பயன்?” என்ற அவநம்பிக்கை.இன்றைய தலைவர் @mkstalin தலைமையில் கழகம் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கிய 2019-ல் இருந்து அரசியலைப் பின்தொடரத் தொடங்கியவனான எனக்கு, இந்தத் தேர்தல் தோல்வி உண்மையிலேயே மீள முடியாத பேரிடியாக விழுந்தது. துயரம். அதுவும் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப துயர் கூடிக் குறையும். தோல்விக்கான காரணங்களைத் தேடி மனம் சஞ்சலமடையும். தெளிவை பல வழிகளில் எட்ட முயன்றும், மீண்டும் துயர் சூழ்ந்துகொள்ளும்.
தோல்வியிலிருந்து மீளவோ, ஆறுதல் தேடவோ பற்றிக்கொள்வது தலைவர் கலைஞரையும் அவரது எழுத்துக்களையும்தான். தேர்தல் சறுக்கல்களின் போதெல்லாம் “உடன்பிறப்பே…” என்று அவர் விளித்து எழுதிய கடிதங்கள் ஊக்கமளிக்கும். ஆற்றுப்படுத்தும்.
திடீரென்று இருளில் தூக்கி எறியப்பட்டுள்ளோம். எங்களை அரவணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறோம். எங்களை மீட்டெடுங்கள், தலைவரே.
At times, the political becomes personal.
P.S. 2026 தேர்தல் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தலைவர் நினைவகத்தில் எடுத்த படம்.
#KalaignarForever #Kalaignar103
Comments
Post a Comment