Delimitation & The South

 


  இந்திய ஒன்றியம் முழுக்க நடைபெற்றுவரும் #CJP போராட்டமும், #NEET குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரமும், தொகுதி மறுவரையறை எனும் விவாதத்தைச் சற்றுத் தள்ளிப்போட்டுள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் அதிகக் கவனம் பெறும் ஒன்றாக Delimitation திகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம் என்று நினைத்திருந்தேன்.

சட்டமன்றம்–நீதிமன்றம்–மக்கள்மன்றம் என அனைத்து மன்றங்களில் இருந்தும் எவ்வித நெருக்கடியும் இன்றி தன்னை Isolate செய்து கொள்ளும் சிறப்புக்குரியது Delimitation Commission. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதற்கு அளித்துள்ள சலுகை அப்படியானது. சட்டமியற்றிய நம்முடைய முன்னோர்கள் இப்படியான ஓர் அதீத பலத்தைத்தான் அந்த ஆணையத்திற்கு அளித்துள்ளார்கள்.
எதிர்வரும் Delimitation-ஐ மேற்கொள்ள மக்களவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அந்த ஆணையம் அளிக்கும் முடிவுகளை Contest செய்யக்கூட மாநிலங்களுக்கோ அல்லது குடிமக்களுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம் அதை அனுமதிக்கவில்லை.
Delimitation-ன் 50 ஆண்டுகால உறைவுக்குப் பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் அதிகாரப் பேரத்தை இழக்க நேரிட வழிவகை செய்யும் முடிவுகளையே இந்த ஆணையம் சமர்ப்பிக்கும். தவிர, #Gerrymandering போன்ற நுணுக்கமான பல்வேறு சிக்கல்களும் இதில் மறைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ‘ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’வின் முதற்கட்ட அறிக்கையில் Delimitation குறித்த அத்தியாயம் மேலும் சில திறப்புகளை நமக்கு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% சரிநிகர் உயர்வை வழங்குவதோ, அல்லது ஏற்கனவே இருக்கும் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இடங்கள் உயர்த்தப்படுவதோ இதற்கு நிறைவான தீர்வை வழங்கப் போவதில்லை.
வட இந்திய மாநிலங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற முன்நிபந்தனையுடன், மக்கள் தொகை அடிப்படையிலான Delimitation-ஐ இன்னும் நூறாண்டுகளுக்கு(2126 வரை) நிறுத்தி வைக்க வேண்டும். இது மட்டும்தான் ஒரே தீர்வாக அமையும். மற்ற அனைத்து தீர்வுகளும் வடக்கு–தெற்கு என்ற பிளவை மேலும் அதிகரிக்கவே வழிவகை செய்யும்.
கீழே இருக்கும் செய்திக் குறிப்பும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூலும் இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாளைய பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தென்னிந்தியர்களின் தலையாய பொறுப்பு.

Comments