அரசியலும் ஆலயங்களும்!


 

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு பொதுவெளிகள் என்பவை ஏதோ ஒரு விதத்தில் அணுக்கமற்றவையாகவே திகழ்ந்தன.


அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், நீதி மன்றங்கள் போன்ற அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய நவீன நிறுவனங்கள் மட்டுமின்றி மரபார்ந்த கோவில்கள், இதைச் சுற்றி இருக்கும் தெருக்கள் என அனைத்தும் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு அனுமதி மறுக்கும் ஒன்றாகவே விளங்கியது. அல்லது இந்நிறுவனங்கள் பார்ப்பனர்களிடம் இருந்து பார்ப்பனர் அல்லாதாரை வேறுபடுத்திக் காட்டவே பல வழமைகளை கடைப்பிடித்து வந்தன.

நீதிக்கட்சி அரசு அமைந்த பிறகுதான் இந்த இறுக்கம் தளர்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அறநிலையத் துறை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படுகிறது. கோவில் trustee பொறுப்பில் பார்ப்பனரல்லாத எண்ணிக்கை அதிகரிக்க தொடங்குகிறது. கோவில்கள் இதன் பின் தான் மக்கள்மயபட தொடங்குகின்றன.

பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்கும் மடங்களின் சொத்துக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பார்ப்பனர்கள் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் நீதிக்கட்சித் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினர்.

வைக்கம் தெரு நுழைவு போராட்டம் - சேரன்மாதேவி குருகுல போராட்டம் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்படுத்திய அதிருப்தி காரணமாக தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்க சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து பணியாற்றுகிறார். ஆலய நுழைவு போராட்டம், பிராமணாள் கஃபே பெயர் அழிப்பு போராட்டம் ஆகியவை சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பின்னர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக திமுக நடத்திய சட்ட போராட்டங்கள், அதை தொடர்ந்து அர்ச்சகர் நியமனங்கள், அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என இவற்றைப் பற்றியெல்லாம் மிக விரிவாக பதிவு செய்கிறது Manu S அவர்களின் ‘The People's Sanctum’ நூல்.

ஆலய நுழைவுக்கு காங்கிரஸ் கட்சியின் வைத்தியநாத அய்யரை மட்டுமே உதாரணமாகக் காட்டிக் கொண்டிருக்கும் வரலாற்றின் உண்மை பின்னணியை இந்த நூலில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Article 25(2) (b)- சரத்தில் ‘providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.’ என்ற சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘throwing open’ என்ற சொற்றொடர் முதலில் நீதி கட்சி தலைவர் Dr. P. Subbarayan அவர்கள் அறிமுகப்படுத்திய Temple Entry for Depressed Classes in 1939 தீர்மானத்தில் இடம்பெற்றது என்பதை தெளிவுபடுத்துகிறார்.

மேலும் இதில் ‘throwing open’ என்பதை வெறும் ஆலய நுழைவோடு சுருக்காமல் கருவறை நுழைவுக்கும் நீட்டிக்கலாம் என்று நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

திராவிட இயக்க வரலாற்றியலில் நெடுநாட்களாக ஆவணப்படுத்தப்படாமல் இருந்த ஒரு பகுதியை உள்ளடக்கி இந்நூல் வெளியாகி இருக்கிறது.

முரசொலி பாசறையில் இந்நூலுக்கு ஒரு சிறு அறிமுகம் எழுதி இருக்கிறேன். நாளைய தினம் வெளியாகிறது. வரும் சனிக்கிழமையன்று இந்நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை Victoria Public Hall-ல் நடைபெறவிருக்கிறது. வாய்ப்புள்ளோர் நூலை வாசியுங்கள், விருப்பமுள்ளோர் நிகழ்வில் பங்கெடுங்கள்.

#Temple #DMK #DravidianMovement #SelfRespect

Comments