Viewing Caste Inequality Upside Down //EPW//


  





இந்த வார EPW இதழில் Ashwini Deshpandey முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர்த்த தென் இந்திய மாநிலங்களில்(KA, AP, T) பார்ப்பனர்களுக்கு சாதகமான பல திட்டங்களை அம்மாநில அரசுகள் தீட்டி கொண்டு இருக்கின்றன.
ஆந்திராவில் , சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு 2014 டிசம்பர் மாதம் திட்டம் ஒன்றை வெளியிடுகிறது, அதன் பெயர் "AP Brahmin Welfare Corporation'. இதற்கு அதிகளவிலான நிதி ஒதுக்க பட்டு இருப்பதாக CM Office Real-time Executive Dashboard மூலம் அறிய முடிகிறது.
இது தவிர்த்து பார்ப்பனர்களுக்கு என்றே தனியா பல திட்டங்களை தீட்டியுள்ளது ஆந்திர அரசு. ஆந்திராவில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 5 % என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த திட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களையும் இங்கு கவனிக்க வேண்டும்.

பார்ப்பன மாணவர்கள் வேதங்கள் படிக்க “Vedavyasa” என்ற திட்டம்.
“Gayathri Scheme” என்ற பெயரில் முதல் மதிப்பெண் பெரும் பார்ப்பன மாணவர்களுக்கென தனி நிதி உதவி திட்டம்.
Bharati Scheme for Education என்ற பெயரில் பார்ப்பனர்களின் மேற்படிப்புக்காக நிதி உதவி.
‘Vasishta’ என்ற பெயரில் பார்ப்பன மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனி திட்டம்.
Dronacharya Skill Development Scheme என்ற பெயரில் பார்ப்பன மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு தனித்திட்டம்.
Chanakya Swayam Upadhi Scheme என்ற பெயரில் பார்ப்பன தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம்.
Kalyana­mastu Pathakam, Kashyapa Scheme, Garuda Scheme, Bhargava Matching Scheme இப்படி வாயில் நுழையாத சமஸ்கிருத பெயரில் பார்பனர்களுக்கென்று பிரத்தியோகமாக பல திட்டங்களை ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு வருவாயில் இத்திட்டங்களுக்கு மட்டும் செலவிடப்படும் நிதி, சில ஆயிரம் கோடிகளில் இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம்.
இதை போலவே 2017 ஜனவரி முதல் தெலுங்கானாவும் "Telangana Brahmin Samkshema Parishad (TBSP)" என்ற பெயரில் பல பிரத்தியோக திட்டங்களை பார்பனர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
Arundhati , Maitreyi என்ற பெயரில் கர்நாடக அரசும் பார்ப்பன பெண்களுக்கும், பார்ப்பன பூசாரிகளை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் நிதி உதவி திட்டம் ஒன்றை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

India Human Development Survey (IHDS) வை அடிப்படையாக வைத்துக்கொண்டு இதுபோன்ற திட்டங்களின் தேவை என்ன என்பதை கேள்விக்குட்படுத்துகிறார் Deshpandey. பல சமூக, பொருளாதார குறியீடுகளில் பார்ப்பனர்களே பிற சமூகத்தினாராவை விட முன்னிலையில் இருக்கிறார்கள். பல குறியீடுகளில் அவர்களின் வளர்ச்சி பிற சமூகத்தவரோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக இருகிறது.

ஏழை பார்பனர்கள் கூட பிற சமூகத்தில் இருக்கும் ஏழைகளை காட்டிலும் உயர்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். இந்த திட்டங்கள் எல்லாம் ஏழை பார்ப்பனர்களை காரணம் காட்டியே தீட்டப்பட்டுள்ளது
. வெறும் பொருளாதாரத்தை மட்டும் வைத்து ஏழமையை தீர்மானிப்பதும் அதன் அடிப்படையில் திட்டங்களை ஏற்படுத்துவதும், EWS போன்ற சமூக அநீதிகளை செயல்படுத்துவதும் ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சாட்சி.
இந்திய அரசமைப்பில் கூறப்பட்டிருக்கும் சமத்துவம் என்ற கொள்கைக்கே இவை அனைத்தும் எதிராக உள்ள திட்டங்கள் என்பதையும் Deshpandey குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த சமூக -அரசியல் மாற்றங்களை பிற தென்னிந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியமாகும். மேலும் இங்கு ஏற்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் அனைவருக்குமான திட்டங்களாக(Universal) இருப்பதும், திட்டத்தின் பெயர்களும் சாதி ஒழிப்பை முன்னெடுத்த தலைவர்களின் பெயர்களில் இருப்பதையும் கவனித்து பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 % இடஒதுக்கீட்டினால் பார்ப்பனர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை என்பதை தான் "Tamil Brahmans: The Making of a Middle-Class Caste" புத்தகம் தெளிவு படுத்துகிறது.
பிற தென்மாநிலங்களில் முக்கியமான அதிகாரங்கள்(bureaucratic positions) எல்லாம் பார்ப்பனர்கள் கையில் இருப்பதால் இது போன்ற திட்டங்கள் எல்லாம் எளிமையாக எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்த முடிகிறது . தமிழ்நாட்டில் இது போன்ற திட்டங்களை இனி வரும் ஆட்சியாளர்கள் நினைத்தாலும் செயல்படுத்தமுடியாது என்பது தெளிவு.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் மூலமாக நடந்த ஜனநாயகமயமாக்கம், அதிகார பொறுப்புகளை மட்டும் ஜனநாயகமயமாக்கவில்லை அந்த அதிகாரங்களையும்(Power) அனைவருக்குமான ஒன்றாக ஆகியுள்ளது.
இதில் உள்ள குறைபாடுகளையும், போதாமைகளையும் நாம் தொடர்ந்து மறுசீரமைத்து வந்துள்ளோம். இடஒதுக்கீடு முதற்கொண்டு அனைத்து திட்டங்களிலும் இந்த மறுசீரமைப்பு நடந்துள்ளது.
MSS பாண்டியன் சொல்வதை போல் "STRANGENESS OF TAMILNADU " என்று தான் இத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
மிக முக்கியமான கட்டுரை, தமிழ்நாட்டில் நடந்த திராவிட இயக்க அரசியலை மனதில் பொருத்திக்கொண்டு இந்த கட்டுரையை வாசிப்பது பல திறப்புகளை/புரிதல்களை நமக்கு ஏற்படுத்தும்.
அவசியம் வாசிக்கவும். இந்தவாரம் முழுக்க EPWல் இலவசமாக படிக்க கிடைக்கும்.

Comments