Lady Doctors - The Untold Stories of India’s First Women in Medicine

 ‘I had even then set my heart upon something high and I wanted to be a different woman from the common lot.’ – Muthulakshmi Reddy




 பாதி வரலாறு தான் நமக்கு கடத்தப்படுகிறது அது ஆண் மயப்பட்ட வரலாறாகவே இருக்கிறது, ஒரு மனிதனுக்கு உத்வேகமாகவும் லட்சியமாகவும் இருப்பதற்கு ஆணே தகுதி வாய்ந்தவனாக முன்னிறுத்தப்படுகிறான். பெயருக்கு  பின்னல் தந்தை பெயரை சேர்த்துக்கொள்வதில் தொடங்கி தந்தை பிறந்த ஊரை சொந்த ஊராக சொல்வது வரை அனைத்தும் பாதி வரலாறாகவே சொல்லிவிக்க பட்டுள்ளது. 


பெண்கள் குறித்தும் அவர்களின் சாதனைகள் குறித்தும் சமீபகாலங்களில் தான் வரலாறு எழுதப்பட்டு வருகிறது. உதேவகமளிக்கும் ஒன்றாகவே அவை இருக்கிறது. இங்கு உருவான பெண் ஆளுமைகள் சமூக  தடைகளை தாண்டியே வெற்றிபெற்றுள்ளார்கள். Nivedita Louisஎழுதிய 'முதல் பெண்கள்' நூலை படித்தபோது இப்படி  தோன்றியது. அந்த வகையில் Kavitha Rao எழுதி சமீபத்தில் வெளியான “Lady Doctors The Untold Stories of India’s First Women in Medicine” ஆகச்சிறந்த புத்தகம் என்பேன்.  


மேற்குலகில் பெண்கள், மருத்துவம் போன்ற துறைகளில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அனுமதி மறுக்கப்பட்டவர்களாகவே இருந்துள்ளார்கள். ஆண் வேடமிட்டு மருத்துவம் பயின்ற நிகழ்வெல்லாம் நடந்துள்ளது, சிலர் மருத்துவம் படித்துவிட்டு பயிற்சி செய்வதிலிருந்து புறக்கணிக்கப் பட்டும் இருகிறார்கள். பலருக்கு மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் வழங்க படவில்லை . இப்படி மேற்குலக பெண்களே மெனக்கெட்டு மருத்துவம் படித்த பொது. இந்தியா போன்ற பிற்போக்கான சமூகத்தில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். 


இந்த புத்தகம் இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய 6 பெண் ஆளுமைகள் பற்றி பேசுகிறது, மருத்துவம் என்ற சொல் இங்கு நவீன அலோபதி மருத்துவதையே குறிக்கிறது. மருத்துவம் குறித்து கடைசியாக Paul Kalanithi எழுதிய நினைவு குறிப்பான(Memoir) “When Breath Becomes Air” வாசித்ததாக நியாபகம்.  


Anandhibai Joshi ,  Kadambini Ganguli, Rukhmabai Raut, Haimabati Sen, Muthulakshmi Reddy, Mary Poonen Lukose ஆகியோர் தான் அந்த ஆறு பெண் மருத்துவர்கள். இதில் Rukhmabai மற்றும் Muthulakshmi தவிர்த்து அனைவரும் உயர்சாதியை  சேர்ந்தவர்கள். புரட்சிகர தேசியவாதிகளின் கனவு நாயகனான திலகரிடமிருந்து மோசமான எதிர்வினைகளையும் அவதூறுகளையும் தனது சாதிக்காகவே சந்தித்தார் Rukhmabai. எத்தகைய பிற்போக்குத்தனங்களை தேசியவாதிகள் கொண்டிருந்தார்கள் என்பதை இந்நூலை வாசிப்பவருக்கு புலப்படும். 


பிற வரலாற்று புத்தகம் போல் அல்லாமல் இது தென்னிந்திய பெண் ஆளுமைகளையும் பதிவுசெய்கிறது, Muthulakshmi Reddy, Mary Poonen Lukose இருவரும் பிரிட்டிஷ் இந்தியா அல்லாத சுதேச சமஸ்தானங்களை(Pudukkottai , Travancore ) சேர்ந்தவர்கள் அதனாலேயே அவர்களின் வரலாறு சுவாரசியம் மிகுந்த ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் Manu S Pillai  எழுதி வெளியான False Allies சுதேச சமஸ்தான்களின் வரலாறை அருமையாக பதிவுசெய்துள்ளது. 


Muthulakshmi Reddy, Mary Poonen Lukose இருவரும் மருத்துவம் படிக்க முக்கிய காரணம் அந்த சுதேச சமஸ்தானங்களை ஆண்ட மன்னர்கள்(Marthanda Bhairava Tondaiman, Moolam Thirunal), மேலும் அந்த மன்னர்களுடன் இவர்களின் குடும்பம் கொண்ட  தொடர்பே ஆகும். இன்றைய கேரளாவின் ஆகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பிற்கு Travancore மஹாராணி Sethu Lakshmi Bayi  மற்றும் Mary Poonen Lukose ஆகியோரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. 


மெட்ராஸில், அவ்வை இல்லம்,  அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆகிவற்றிற்கு பின்னால் இருக்கும் கனவு முத்துலட்சுமி அவர்களுடையது. தேவதாசி முறையை  ஒழித்ததில் தொடங்கி தனது கொள்கைக்காக காங்கிரஸ் இயக்கத்தில் இருபெரும் தலைவர்களான ராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தியை பகைத்து கொண்டது வரை இவரின் Legacy இருந்துள்ளது. தேசிய இயக்கத்தை ஆதரித்தாலும் சமுக காணோட்டத்தில் முத்துலட்சுமி அம்மையாருக்கு திராவிட இயக்க கூறுகள் இருந்ததென சொல்லலாம்.  ஆனால் எந்த காரணத்தாலோ ராஜகோபாலாச்சாரியின் குல கல்வி திட்டத்தை(M.S.E.E) முத்துலட்சுமி ரெட்டி ஆதரித்துள்ளார் என்பது வரலாற்று நகைமுரண். 


Anandhibai Joshi தான் இந்தியாவில் இருந்து மருத்துவம் பயில வெளிநாடு சென்ற முதல் பெண். அவர் மருத்துவ பயிற்சி எதுவும் செய்யாமலே உடல்நல குறைவு காரணமாக இயற்கையெய்தி விட்டார். இவரை தொடர்ந்து அந்த பகுதியில்  பல பெண்கள் மருத்துவம் பயின்றார்கள். தனது இந்து அடையாளத்தை கைவிடாமல் இருந்ததற்கு திலகரிடம் பாராட்டும் அவரின் பத்திரிகையில் அவ்வப்போது சில புகழாரத்தையும் இவர் பெற்றிருக்கிறார். 


 ராமாபாய்க்கு எதிராக தேசியவாதிகள் பலரும் Anandhibai Joshiயையே முன்னிறுத்தினார்கள்.  இவர் பார்ப்பனராக இருந்ததும் அதற்கு  முக்கிய காரணமாக இருக்கலாம். Anandhibai போல் Rukhmabaiஇல்லை என்றும் நவீன ஆடைகளை அவர் அணிகிறார் என்றும் திலகர் தூற்றியுள்ளார். இப்படி பல எதிர் அரசியலும் ஆண்களால் பெண்கள் மேல் வழிய திணிக்கப்பட்டிருக்கிறது. 


பெண் மருத்துவர்களின் வருகைக்கு பின் தான் பெண்களின் சுகாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. இன்றைக்கு தமிழ்நாடும் கேரளாவும் சுகாதாரத் துறையில் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கிய காரணமாகும். 


இந்த 6 பேரிடமும் இருந்து நாம் கற்றுக்கொள்ளவும், ஊக்கம்பெறவும் நிறையவே இருக்கிறது. 


இந்த புத்தகம் தரவுகளால் நிரம்பிய ஆய்வு நூல் , சுவாரசியமான எழுத்து நடை,  பல்வேறு விஷயங்களை கோர்த்து எழுதும் பாங்கு படிக்கும்போது சலபதியை நினைவூட்டியது. 


அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். வாய்பிருப்போர் அவசியம் வாசிக்கவும். 


Lady Doctors - The Untold Stories of India’s First Women in Medicine

Kavitha Rao

 


Comments